டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கும்மிடிப்பூண்டியில் பைக் விற்பனை கடையில் 4 லட்சம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையில் சாமிரெட்டிக் கண்டிகை பகுதியில் உள்ள ஹீரோ ஹோண்டா பைக் விற்பனை கடையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மர்மநபர்கள் கடையின் பின்பக்க கதவை உடைத்து

News image
Updated On :11 அக்டோபர் 2013, 9:55 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையில் சாமிரெட்டிக் கண்டிகை பகுதியில் உள்ள ஹீரோ ஹோண்டா பைக் விற்பனை கடையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மர்மநபர்கள் கடையின் பின்பக்க கதவை உடைத்து கடைக்குள் நுழைந்து 4 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து உள்ளனர்.

கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் மகன் தட்சிணாமூர்த்தி(38). இவர் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையில் சாமிரெட்டிக் கண்டிகை பகுதியில் ஹீரோ ஹோண்டா கடையை கடந்த ஒரு வருடமாக நிர்வாகித்து வருகின்றார்.இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இவர் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று வெள்ளிக்கிழமை காலை கடையை திறந்து பார்த்தபோது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும், கடையில் இருந்த ரூபாய் 4 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதையும் அறிந்து அதிர்ந்தார்.

தொடர்ந்து இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு அவர் தகவல் அளித்ததை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.