மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பல லட்சங்கள் பணம் ஏமாற்றியதாக மை கல்யாண் கஸ்டமர் சர்வீஸ் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :11 அக்டோபர் 2013, 3:02 pm

ஜி.சுந்தரராஜன்

பண சுழற்சி முறையில் பல லட்சங்கள் பணம் ஏமாற்றியதாக மை கல்யாண் கஸ்டமர் சர்வீஸ் நிறுவனத்தின் மீது சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் வடக்குவீதியில் மை கல்யாண் கஸ்டமர் சர்வீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் கல்யாணராமன். இதன் மேலாளராக புதுச்சேரி முத்தையால்பேட்டையைச் சேர்ந்த வீரைய்யன் உள்ளார். இந்நிலையில் தஞ்சாவூர் ஆர்.எம்.எஸ்.காலனியைச் சேர்ந்த அமீதுதீன் மகன் அமீர்சையது என்பவர் சுழற்சி முறையில் பணத்தை விட்டு அதிக பணம் தருவதாக தன்னிடம் பணத்தை பெற்று பல லட்சங்கள் பணத்தை ஏமாற்றிவிட்டதாக மேற்கண்ட இருவர் மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நகர போலீஸார் மேற்கண்ட இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.