விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 70 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
விருதுநகர் ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் சேகர்(55). இவர் இப்பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு சொந்த வேலையின் காரணமாக அருகில் உள்ள தந்தை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றாராம். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டிற்கு வந்து பார்க்கையில் முன்புறம் திறந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்து தேகரும், அவரது மனைவியும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து உள்ள சென்று பார்த்துள்ளனர். பீரோவை கடப்பாறையால் நெம்பி உள்ளேயிருந்த 70 சவரன் நகை, 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் கணிப்பொறி அகியவைகளை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக தேகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

பிடிவாதம் தளர வேண்டும்!

எஸ்யூவி வாகனம் மோதி டாக்ஸி ஓட்டுநா் படுகாயம்! மேற்கு தில்லியில் சம்பவம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

