தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சகஜானந்தா வாழ்ந்த இடத்திலேயே மணிமண்டபம் கட்டுவதுதான் பொருத்தமானதாகும்: மார்க்சிஸ்ட் கம்யூ எம்எல்ஏ கருத்து

சிதம்பரத்தில் தமிழகஅரசு சார்பில் சுவாமி சகஜானந்தாவிற்கு மணி மண்டபம் கட்டுவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி, நந்தனார் கல்விக்கழகம், சமூகஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்ற

News image
Updated On :15 அக்டோபர் 2013, 9:56 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா வாழ்ந்த இடத்திலேயே மணிமண்டபம் கட்டுவது பொருத்தமானதாகும் என சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் தமிழகஅரசு சார்பில் சுவாமி சகஜானந்தாவிற்கு மணி மண்டபம் கட்டுவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி, நந்தனார் கல்விக்கழகம், சமூகஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்ற அவரச ஆலோசனைக் கூட்டம் சாய்மஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-

எனது கோரிக்கையை ஏற்று அடித்தட்டு மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவிற்கு மணி மண்டபம் அமைக்க தமிழக முதல்வர் கடந்த 15-6-2013ல் சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏற்கனவே உதவிஆட்சியராக இருந்த  எல்.சுப்பிரமணியன் சுவாமி சகஜானந்தா வாழ்ந்த நந்தனார் பள்ளிக்கு அருகே சிதம்பரம்-சீர்காழி சாலையில் இரண்டரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்தும், அந்த இடத்திற்கு எவ்வித ஆட்சேபணை இல்லை என விரிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார். மேலும் அந்த இடத்தில் உள்ள நீதிமன்ற தடை ஆணைக்கு, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களே வழக்கை விலக்கி கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது சி.முட்லூர் அரசு கல்லூரி அருகே அமைக்க வேறு இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரியவருகிறது. எனவே சுவாமி சகஜானந்தா வாழ்ந்த நந்தனார் பள்ளி அருகேயே மணி மண்டபம் அமைக்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கூட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் முன்னிலை வகித்தார். நந்தனார் கல்வி வளர்ச்சிக் கழக இயக்குநர் ரா.காவியச்செல்வன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மூத்ததலைவர் பி.கலியபெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கற்பனைச்செல்வம், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, விடுதலைச்சிறுத்தைகள் நிர்வாகிகள் குறிஞ்சிவளவன், அதியமான், ரா.நெடுமாறன், ரத்தினவேலு, செல்வமணி, ஆதிமூலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.