அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

நவ.21 முதல் மதுரை-துபாய் விமான சேவை: மாணிக் தாகூர்

மதுரை விமான நிலையத்திலிருந்து நேரடியாக துபாக்கு நவ-21ம் தேதியிலிருந்து விமான சேவை தொடங்க இருப்பதாக மக்களவை

News image
Updated On :17 அக்டோபர் 2013, 1:55 pm

மதுரை விமான நிலையத்திலிருந்து நேரடியாக துபாக்கு நவ-21ம் தேதியிலிருந்து விமான சேவை தொடங்க இருப்பதாக மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் வியாழக்கிழமை  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை விமான நிலையம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும் என தொழில் பிரமுகர்கள் மற்றும் வர்த்தகர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் மதுரை விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மூலம் கொழும்புக்கு நேரடியாக விமானச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், நவ.21ம் தேதியிலிருந்து இங்கிருந்து துபாய்க்கு நேரடியாக விமானச் சேவை தொடங்கி, தொடர்ந்து நாள்தோறும் இயக்கப்பட இருக்கிறது.

    இந்த விமானம் மதுரையிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நான்கரை  மணிநேரத்தில் துபாய் சென்றடையும். பின்னர் அங்கிருந்து அதிகாலையில் புறப்பட்டு 9.45-மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேரும். எனவே இந்த விமானச் சேவையின் மூலம் காய்கறிகள், மலர் வகைகள், மருத்துவப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு செல்வதற்கு வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே தென்மாவட்டங்களில் இருந்து துபாய் பகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் எளிதாக தங்களது சொந்த ஊர்களுக்கு வந்து செல்வதற்கு பயனுள்ளதாக விமானச் சேவை அமையும் என மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.