வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு முகாம்கள், மனித சங்கிலி, சைக்கிள் பேரணி, கட்டுரைப் போட்டி, விழிப்புணர்வு நாடகம், கோலப்போட்டி ஆகியவை நடத்தப்படுகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களை கண்காணிக்க மண்டல அலுவலர்கள் நியமிக்கபப்ட்டுள்ளனர். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்சாரம், கழிப்பறை, குடிநீர் வசதிகள் உள்ளதா என கண்காணித்து அறிக்கை தருமாறு மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அறை அமைக்கப்பட்டு, அனைத்து புகார்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. புகார் தெரிவிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04144- 222256, 222322.