டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாநகர பேருந்தின் மீது ஆந்திர மாநில அரசு பேருந்து மோதி 7 பேர் காயம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் அருகே வடமதுரை கூட்டு சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் மாநகர பேருந்தின் மீது ஆந்திர மாநில அரசு பேருந்து மோதியதில் 7 பேர்

News image
Updated On :21 அக்டோபர் 2013, 10:13 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் அருகே வடமதுரை கூட்டு சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் மாநகர பேருந்தின் மீது ஆந்திர மாநில அரசு பேருந்து மோதியதில் 7 பேர் காயமடைந்தனர்.

ஆரணியில் இருந்து பெரியபாளையம் வழியே ஆவடி நோக்கி 8  பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு  மாநகர பேருந்து சென்றது. இந்த பேருந்தை முத்து கிருஷ்ணன் என்பவர் ஓட்டினார்.இந்த பேருந்து பெரியபாளையம் அருகே வட மதுரை கூட்டு சாலையில் திரும்பியது. அப்போது எதிர்புறமாக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி செல்ல இந்த சாலையில் திரும்பியது. அந்த பேருந்தை பிள்ளையா (50) ஓட்டி வந்தார். இந்நிலையில் மாநகர பேருந்தின் மீது ஆந்திர அரசு போக்குவரத்து கழக பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் ஆந்திரா மாநில போக்குவரத்து கழக பேருந்தின் ஓட்டுனரான ராஜபாளையத்தை சேர்ந்த பிள்ளையா, மற்றும் மாநகர பேருந்தில் இருந்த பயணிகளான ஆதம்பாக்கத்தை சேர்ந்த வெங்கேடசன்(42), வேளச்சேரியை சேர்ந்த சேகர்(40), பட்டாபிராமை சேர்ந்த பழனி(45), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்வரி(73), வடமதுரையை சேர்ந்த சேட்டு(40) உட்பட 7 பேர் காயமடைந்தனர் காயமடைந்தவர்கள்  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து பெரியபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.