தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பொன்னேரியிலிருந்து சிதம்பரம் நகருக்கு நீர் திறந்துவிட கோரிக்கை

நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கடலூர் மாவட்டம் பொன்னேரியிலிருந்து சிதம்பரம் நகருக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்புக்குழு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2013, 10:42 am

ஜி.சுந்தரராஜன்

நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கடலூர் மாவட்டம் பொன்னேரியிலிருந்து சிதம்பரம் நகருக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்புக்குழு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: சிதம்பரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதை ஒட்டி இந்து ஆலய பாதுகாப்புககுழு முதல்வரின் மழைநீர் சேகரிப்பு திட்டம் முழு வெற்றி பெற நகரில் உள்ள குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சிதம்பரம் ஓமக்குளம் 90 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் தனிப்பிரிவு அனுமதியுடன் தூர்வாரப்பட்டு, தற்போது 30 லட்சம் கனஅடி நீர் சேமிக்கும் நிலையில் உள்ளது. ஓமக்குளத்தில் நீரை சேமிப்பது தொடர்பாக சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரையும், உதவி செயற் பொறியாளரையும் வலியுறுத்தி வருகிறோம். தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவன், பொன்னேரியிலிருந்து ஓமக்குளம் வரை 4 கி.மீ்டர் உள்ள வாய்ககாலை சீரமைத்து தரும்படி பொதுப்பணித்துறையினரிடம் தெரிவித்தார்.

ஆனால் பொதுப்பணித்துறையினர் 2014 பிப்ரவரி மாதம் நிதிவந்த பிறகுதான் பொன்னேரி முதல் ஓமக்குளம் வரை உள்ள வாய்க்காலை சீரமைக்க முடியும் என தெரிவித்துள்ளனர். வாய்க்காலை சீரமைக்காவிட்டாலும், அடைப்புகளை அகற்றி இரண்டு அடிக்கு நீர் வரும் பாதையை சரி செய்து தரும்படி வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் வாய்க்காலை சரி செய்ய பொதுப்பணித்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்ற வாரம் பெய்த மழையில் சிதம்பரம் அருகே உள்ள பொன்னேரி நிரம்பி வழிந்து அந்த நீர் கடலுக்கு வீனாக சென்றது. தமிழக முதல்வர் மீது மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும். பொன்னேரி- ஓமக்குளம் வாய்க்காலை சீரமைத்து சிதம்பரம் நகருக்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனை தீரும் என கடிதத்தில் மு.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.