தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஆர்.கனகசபையின் வாழ்க்கை முக்கியமானதாகும்: பி.எஸ்.ஞானதேசிகன்

அரசியலில் எப்படி தூய்மையாக, ஏழ்மையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என வாழ்ந்த முன்னாள் எம்பி ஆர்.கனகசபை பிள்ளையின் வாழ்க்கை இன்றைய அரசியல்வாதிகளுக்கு முக்கியமானதாகும் என தமிழ்நாடு

News image
Updated On :27 அக்டோபர் 2013, 3:01 pm

ஜி.சுந்தரராஜன்

அரசியலில் எப்படி தூய்மையாக, ஏழ்மையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என வாழ்ந்த முன்னாள் எம்பி ஆர்.கனகசபை பிள்ளையின் வாழ்க்கை இன்றைய அரசியல்வாதிகளுக்கு முக்கியமானதாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்தார்.

சிதம்பரம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.கனகசபை பிள்ளை நூற்றாண்டு விழா தனலட்சுமி அம்மாள் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். டாக்டர் ஆர்.முத்துக்குமரன் வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைர் பி.எஸ்.ஞானதேசிகன் பங்கேற்று பேசியதாவது:

ஆர்.கனகசபை 10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 5 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அன்றைக்கு பொருளாதார கட்டுப்பாடு என்பது அரசர்கள் கையிலும், முதலாளிகள் கையிலும் இருந்தது. ஏழை மக்களுக்கு இந்த நிதியை கொண்டு செல்வது என கூட்டுறவு துறையை உருவாக்கி தென்னாற்காடு மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார். கூட்டுறவுத்துறையில் பல்வேறு பதவிகளை வகித்து அகில இந்திய கூட்டுறவு சம்மேளன தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு பதவிகள் வகித்தாலும், அவர் வகித்த பதவிக்கு பெருமை சேர்த்தவர் ஆர்.கே. மிகப்பெரிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவர் இளையபெருமாளை அரசியக்கு கொண்டு வந்தவர். நேரு, அன்னை இந்திராகாந்தி, பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்டோருடன் நட்பு பாராட்டப்பட்டவர். மேலும் ஆர்.கனகசபை காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தூனாக இருந்துள்ளார் என பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜனார்த்தனம், உயர்நீதிமன்ற நீதிபதி விமலா வேல்முருகன், மத்தியஅரசின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வி.எஸ்.அருணாசலம், முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர், முன்னாள் துணைவேந்தர் ஆளுடையப்பிள்ளை, ஏ.ஞானம், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம், கார்காத்தார் சங்க மாநிலத் தலைவர் கேப்டன் ஆர்.எஸ்.ஜெகதீசன், ஆனந்தநடராஜ தீட்சிதர், முன்னாள் எம்எல்சி சி.ஆர்.லட்சுமிகாந்தன், முன்னாள் தமிழ்நாடு பப்ளிக் சர்விஸ் கமிஷன் தலைவர் ஜி.செல்வகணபதி, முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பிஎல்.முத்துவீரப்பன், உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.

விழாவில் முன்னாள் எம்பி டாக்டர் ப.வள்ளல்பெருமான், முன்னாள் நகரமன்றத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், கடலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏ.நெடுஞ்செழியன், ஆர்.சச்சிதானந்தம், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், டாக்டர் என்.சிதம்பரம் மற்றும் சென்னை தமிழ்நாடு கூட்டுறவு வங்கி (TNSC) பணியாளர்கள், நகர பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் ஆர்.கே.கணபதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.