தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதம்: விவசாயிகள் முடிவு

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசனம் மூலம் பயன்பெறும் விவசாயிகள் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம்

News image
Updated On :27 அக்டோபர் 2013, 11:20 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசனம் மூலம் பயன்பெறும் விவசாயிகள் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூரில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மூலம் பாசனம் பெரும் விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழநாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சி.,மாதவன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.கற்பனைச்செல்வம், வில்லியநல்லூர் விவசாயசங்கத் தலைவர் கருனைச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழநாடு விவசாயிகள் சங்கத் தலைவருமான கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவர் விஜயகுமார், விவசாய சங்க தலைவர்கள் மணி, வெற்றிவேல், ராஜேந்திரன், மஞ்சக்குழி ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஆணையாங்குப்பம், அரியகோஷ்டி, புவனகிரி, கீழமணக்குடி, கரிக்குப்பம் உள்ளிட்ட 10-க்கும்  மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்,  ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: சேத்தியாதோப்பு அணைக்கட்டில் தண்ணீர் திறந்துவிடுமாறு பொதுப்ணித்துறை அதிகாரியை விவசாயிகள் அணுகி கேட்ட போது, நான் முடிவு செய்தால்தான் தண்ணீர் திறந்து விடப்படும் என பதில் கூறியதற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிப்பது; பின்னர் வரும் அக்.31-ந்தேதி பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்தும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் 20 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டு மனுகொடுப்பது; மாவட்ட ஆட்சியர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மூலம் பாசனம் பெறும்  அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து பி.முட்லூர் பகுதியில் மிகபெரிய போராட்டம் நடத்துவது, சிதம்பரம் பொதுப்ணித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது. சேத்தியாதோப்பு அணைகட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவர் விஜியகுமார்,விவசாய சங்க தலைவர்கள் மணி,வெற்றிவேல்,ராஜேந்திரன்,மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கமாள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.