கந்து வட்டி கொடுமை: குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை
சேலம் சிவதாபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (35). வெள்ளிப்பட்டறைத் தொழிலாளி. இவரது மனைவி தங்கப்பொண்ணு (30). இவர்களது குழந்தைகள் வனிதா (7), சரவணன் (5),


சேலத்தில் கடன் பிரச்னை காரணமாக குழந்தைகளைக் கொன்று தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கந்து வட்டிக்காரர்கள் இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சேலம் சிவதாபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (35). வெள்ளிப்பட்டறைத் தொழிலாளி. இவரது மனைவி தங்கப்பொண்ணு (30). இவர்களது குழந்தைகள் வனிதா (7), சரவணன் (5), ரோஷிணி (3). இவர்களில் ரோஷிணியை தங்கப்பொண்ணுவின் சித்தி ராணி தத்தெடுத்துள்ளார். வெள்ளிப்பட்டறை நடத்தி வந்த மாரியப்பனுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சொந்த வீட்டை விற்றுவிட்டு அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ள மாரியப்பன், வெள்ளிப்பட்டறை அதிபரான முருகன் என்பவரிடம் கூலிக்கு வேலை செய்து வந்தார். மேலும் இவரிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் முன்பணத்தை மாரியப்பன் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் சிவதாபுரத்தைச் சேர்ந்த கந்துவட்டிக்காரர்கள் முருகேசன் (47), ஏழுமலை (35) ஆகியோரிடம் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்துவிட்டு முறையே ரூ.33 ஆயிரம், ரூ.3,500 பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் அதை திருப்பிக் கேட்டு வந்ததாகவும், கடந்த சில நாள்களுக்கு முன்பு மாரியப்பனின் வீட்டுக்கு வந்து அவர்கள் சண்டையிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி வேலை செய்து வரும் தனது தந்தை ரங்கசாமியை ஞாயிற்றுக்கிழமை மாலை செல்பேசி மூலம் தொடர்பு கொண்ட தங்கப்பொண்ணு, கடன் தொல்லை தாங்காமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கசாமி, சிவதாபுரத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மாரியப்பனின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, மாரியப்பன், தங்கப்பொண்ணு இருவரும் குழந்தைகள் வனிதா, சரவணன் ஆகியோருக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸாக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மாரியப்பன் குடும்பத்துடன் இறந்ததற்கு கந்து வட்டிக்காரர்களின் தொல்லையே காரணம் என்று அவரது சகோதரர் முருகன் போலீஸில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கந்து வட்டிக்காரர்கள் முருகேசன், ஏழுமலை இருவரையும் கொண்டலாம்பட்டி போலீஸார் கைது செய்தனர். மேலும் மாரியப்பன் வேலை செய்த பட்டறையின் உரிமையாளர் முருகன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக மருத்துவமனையில் மாரியப்பனின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...