இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 24 இலங்கை மீனவர்கள் கைது
இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறிநுழைந்து மீன்பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேரை கடலோர காவல்படையினர் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 4


இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறிநுழைந்து மீன்பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேரை கடலோர காவல்படையினர் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 4 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் இலங்கை மீனவர்கள் அடிக்கடி அத்துமீறி நுழைந்துமீன்பிடித்து வருவதாக புகார் எழுந்தது. இதையெடுத்து, இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான வைபவ் ரோந்து கப்பல் இந்திய கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து ஏறத்தாழ 56 கடல் மைல் தொலைவில் தென்கிழக்குப்பகுதியில் புதன்கிழமை மாலை இலங்கையைச் சேர்ந்த 4 விசைப்படகுகள்மீன்பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்த ரோந்துப் படையினர் 4 படகுகளையும் சுற்றி வளைத்தனர்.
மேலும், படகுகளில் இருந்த இலங்கையைச் சேர்ந்த சிங்கள மற்றும் தமிழ்மீனவர்கள் 24 பேரையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்கள்பயன்படுத்திய விசைப்படகு, அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவலைகள், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் கடலோரகாவல் படையினர் பறிமுதல் செய்தனர்.பிடிபட்ட 24 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை கடலோர காவல் படையினர்வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்குஅழைத்து வருகின்றனர்.
அவர்களிடம் கடலோர காவல் படையினர், கடலோர காவல் குழும (மரைன்)போலீஸôர், தூத்துக்குடி போலீஸார், கியூ பிரிவு உள்ளிட்ட உளவுத் துறை போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு 25 பேரும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.2-வது முறை: இந்திய கடல் பகுதிக்குள் அத்து மீறி நுழைந்ததாக கடந்த இரண்டு மாதத்தில் தற்போது நான்காவது முறையாகவும், அக்டோபர் மாதத்தில் இரண்டாவது முறையாகவும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 17-ம் தேதி இலங்கையைச் சேர்ந்த ஒரு விசைப்படகு மற்றும் 5 மீனவர்களையும், செப்டம்பர் 26-ம் தேதி 6 இலங்கை மீனவர்களும் இந்திய கடல் பகுதியில் நுழைந்ததாக கைது செய்யப்பட்டனர். இதேபோல, அக்டோபர் 9-ம் தேதி நான்கு விசைப்படகுகளில் நுழைந்த 26 மீனவர்களும், தற்போது 24 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...