தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கேள்வி கேட்டதால் ஆத்திரம்?: முன்னாள் எம்.எல்.ஏ.வை பஸ்ஸிலிருந்து தள்ளிய நடத்துனர்

சிவகங்கையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் நேற்று இரவு பயணம் செய்தார் ஆலங்குடி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகர். கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வான இவர், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

News image
Updated On :30 அக்டோபர் 2013, 4:56 am

கவியழகன்

சிவகங்கையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் நேற்று இரவு பயணம் செய்தார் ஆலங்குடி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகர். கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வான இவர், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பேருந்து கீரமங்கலம் அருகே சென்றபோது, இவர், கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குடைந்ததில் அரசுப் பேருந்து நடத்துனர் முனுசாமி கோபம் அடைந்தாராம். ஒரு வேகத்தில் அவர் ராஜசேகரைப் பிடித்துத் தள்ளியதாகத் தெரிகிறது.

இதில், காயமடைந்த ராஜசேகர், உடனடியாக அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நடத்துனர் முனுசாமி மீது கீரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.