இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல என்று அவரது தந்தை இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் இளவரசனின் தந்தை இளங்கோ தாக்கல் செய்த மனுவில், எனது மகன் இளவரசனின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டிய போலீஸார், இதனை தற்கொலை எனக் கூறி வழக்கை முடிக்க நினைக்கின்றனர். எனவே, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே. சசிதரன், இளவரசன் மரணம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் இளவரசனின் தந்தை இளங்கோ, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
எனது மகனுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. எனது மகன் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் குறித்தும் போலீஸார் உரிய விசாரணை நடத்தவில்லை.தற்கொலை செய்து கொள்ளப்போவதாக இளவரசன் தன்னிடம் போனில் பேசியதாக திவ்யா கூறியதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து திவ்யா வேறு யாரிடமாவது கூறினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை. இதுபோல இந்த வழக்கில் விசாரிக்க வேண்டிய பல்வேறு மர்மங்கள் இருக்கும்போது, இளவரசன் தற்கொலை செய்து கொண்டாக தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது விசாரணையை திசைதிருப்பும் முயற்சியாகும். எனவே, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என கோரியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

அதிமுக வென்றதும் பயிா்க்கடன் தள்ளுபடி: தச்சை என்.கணேசராஜா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

