திருச்சியில் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க ஒரே நாளில் ஆன்-லைனில் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
பாஜக தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.கடந்த மாதம் ஹைதராபாத்தில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 26-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பாஜக இளைஞரணி மாநில மாநாட்டில் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இளம் தாமரை மாநாடு எனப் பெயரிடப்பட்டுள்ள இதில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு 5 லட்சம் விண்ணப்ப படிவங்களை பாஜக அச்சடித்து தமிழகம் முழுவதும் அனுப்பியுள்ளது.
அதோடு ஆன்-லைனில் முன்பதிவு செய்வதற்காக www.modiintamilnadu.com என்ற இணையதளம் திங்கள்கிழமை (செப். 2) தொடங்கப்பட்டது.இந்த இணையதளம் மூலம் பெயர், வயது, படிப்பு, வேலை, முகவரி, தொலைபேசி எண், இமெயில் முகவரி போன்ற விவரங்களை பதிவு செய்தால் அவர்களின் இமெயில் முகவரிக்கு அனுமதிச் சீட்டு அனுப்பி வைக்கப்படும். அத்துடன் ரூ. 10 செலுத்தி மாநாட்டில் பங்கேற்கலாம்.
இந்த இணையதளம் தொடங்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் சுமார் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.மாநாட்டுக்காக தில்லி செங்கோட்டை வடிவில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்படவுள்ளது. மாநாட்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்பார்கள் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

அதிமுக வென்றதும் பயிா்க்கடன் தள்ளுபடி: தச்சை என்.கணேசராஜா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

