கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடங்கியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான உயர்மட்ட பறக்கும் சாலைத் திட்டத்துக்கு கடந்த 8-1-2009-ல் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில் இந்தத் திட்டம் இப்போது முடங்கியுள்ளது.இதனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ. 873 கோடி இழப்பீடு தர வேண்டும் என இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வந்த ஒப்பந்ததாரர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கோவை - மேட்டுப்பாளையம் இடையிலான 54 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ. 617 கோடியில் நான்கு வழிச் சாலை அமைக்கும் திட்டம், சிங்கப்பெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதூர் சாலையும், வண்டலூர் - வாலாஜாபாத் சாலையும் சந்திக்கும் இடத்தில் ரூ. 20.89 கோடியில் மேம்பாலம் அமைக்கும் திட்டம், திருச்சி - காரைக்குடி இடையே 107 கிலோ மீட்டருக்கு ரூ. 374 கோடியில் சாலைகளை மேம்படுத்தும் திட்டம், சேலம் - உளுந்தூர்ப்பேட்டை நெடுஞ்சாலைத் திட்டம் ஆகியவை பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளன.
துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட பறக்கும் சாலைத் திட்டத்தை விரைவுப்படுத்தக்கோரி கடந்த 17-8-2013-ல் சென்னை நெற்குன்றத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டடமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதையெல்லாம் யேசித்து முதல்வர் நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவையில் ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல்

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா

மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

