தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆசிரியர் தினம்: அறந்தாங்கியில் 40 ஆசிரியர்கள் கண் தானம்

அறந்தாங்கி அருகே இராஜேந்திரபுரம் நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட 40 ஆசிரியர்கள் தங்கள் கண்களை தானமாக வழங்கினார்கள்.

News image
Updated On :5 செப்டம்பர் 2013, 9:46 am

கவியழகன்

அறந்தாங்கி அருகே இராஜேந்திரபுரம் நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட 40 ஆசிரியர்கள் தங்கள் கண்களை தானமாக வழங்கினார்கள்.

இராஜேந்திரபுரம் நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை  நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் கே.துரையிடம் கல்லூரி முதல்வர் அ.ஹேமாமாலினி, கல்வியியல் கல்லூரி முதல்வர் எஸ்.அன்புமுத்து தலைமையில் 40 பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தங்கள் கண்களை மதுரை அரவிந்த் கண்மருத்துவமனைக்கு தானமாக வழங்கும் விண்ணப்பத்தினை வழங்கினர்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கே.துரை பேசும்போது ஆசிரியர்கள் தற்போது வாழும் தலைமுறைக்கும் எதிர்கால தலைமுறைக்கும் கண்களாக இருந்து வாழ்கையில் முன்னேற பாடுபடுபவர்கள்  அவர்கள் வாழ்ந்து முடிந்த பிறகும் தங்கள் கண்களை முகம் தெரியாதவர்களுக்கும் கொடுத்து இன்னும் வாழ்வார்கள் அவர்களை இந்த ஆசிரியர் தினத்தில் வாழ்த்துவதாக கூறினார். மேலும் அவர் பேசுகையில் தன்னுடைய 5 உறுப்புகளை தானமாக வழங்குவதாக விழாவில் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.