பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொடைக்கானல் மலைச்சாலையில் 300-அடி பள்ளத்தில் வாகனம் உருண்டு பெண் சாவு

தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் இவர் தனது மனைவி செல்வராணியுடன் கொடைக்கானலுக்கு தனது வாகனத்தில் வந்துள்ளார் வாகனத்தை ஜெயசீலன் ஓட்டியுள்ளார் வியாழக்கிழமை காலை கொடைக்கானல்

News image
Updated On :5 செப்டம்பர் 2013, 9:51 am

ஏ. ஆரோக்கியசாமி

கொடைக்கானல் மலைச்சாலையில் தடுப்புச் சுவரை மோதி வாகனம் உருண்டதில் பெண் ஒருவர் இறந்துள்ளார்.

தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் இவர் தனது மனைவி செல்வராணியுடன் கொடைக்கானலுக்கு தனது வாகனத்தில் வந்துள்ளார் வாகனத்தை ஜெயசீலன் ஓட்டியுள்ளார் வியாழக்கிழமை காலை கொடைக்கானல்-மதுரைச் சாலையான பெருமாள்மலைப் பகுதியில் வரும் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி உருண்டது. வாகனமானது 300-அடி பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்தது இதில் வாகனத்தில் இருந்த செல்வராணி(35) சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கொடைக்கானல் போலீசார் மற்றும் தீயனைப்புத் துறையினர் பெருமாள்மலைப் பகுதி மக்கள் உள்ளிட்டவர்கள் வாகனம் உருண்டு கிடந்த இடத்திற்குச் சென்று இறந்த பெண்ணின் உடலை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த ஜெயசீலன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து ஜெயசீலன் கொடுத்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

பாறை மீது லாரி மோதியதில் இரண்டு பேர் காயம்: வத்தலக்குண்டுவிலிருந்து-கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சிக்கு செல்வதற்காக மளிகைப் பொருட்களை ஏற்றிக் கொண்டு லாரி டிரைவர் பாண்டி(60)சென்றுள்ளார்.லாரியானது மயிலாடும் பாறை அருகே சென்ற போது மலைச் சாலையில் கிடந்த பாறையில் லாரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே இருந்த மற்றொரு பாறை மீது மோதியது. இதில் பாண்டி மற்றும் பாக்கியராஜ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

வியாழக்கிழமை அதிகாலை இச்சம்பவம் நடந்ததால் அப் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து பாண்டி கொடுத்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது இந்த மழையால் கொடைக்கானல்-பழனி மலைச்சாலைப் பகுதிகளில் சிறு சிறு பாறைகள்,மண் சரிவுகள், சிறு சிறு மரக்கிளைகள் சாலையில் விழுந்துள்ளது இதனால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.இவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் சாலைப் பணியாளர்கள் சரி செய்ய வேண்டும் எந்தவிதமான பராமரிப்புகள் இல்லாமல் மலைச் சாலைகள் இருந்து வருவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன இவற்றை சரி செய்ய வேண்டுமென்பது வாகன ஓட்டுனர்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.