மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கைது: தா. பாண்டியன் கண்டனம்

தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கண்டனம்

Updated On :6 செப்டம்பர் 2013, 1:55 pm

தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்லூரி நிர்வாகம் செய்த முறைகேடுகள், விதிமுறை மீறல்கள் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த  நூற்றுக்கும் அதிகமான மாணவ,மாணவிகள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.படிப்பைத் தொடர வாய்ப்பு கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 17 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களை போலீஸார் இன்று (செப். 6) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் படிப்பைத் தொடர மத்திய, மாநில அரசுகளும், இந்திய மருத்துவ கவுன்சிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.