விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பட்டாசு ஆலை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் அருகே உள்ள முதலிபட்டி தனியார் பட்டாசு ஆலையில் கடந்தாண்டு இதே நாளில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். அதை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு உறுதிமொழியேற்கவும், நினைவு அஞ்சலி செலுத்தவும் பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
எனவே அதன் அடிப்படையில் முதலிப்பட்டியில் பொது மைதானத்தில் நினைவு ஸ்தூபி அருகே நடந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மகாலட்சுமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் எம்.சி.பாண்டியன் முன்னிலை வகித்தார். முதலிபட்டி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பாதுகாப்பாகவும், விபத்தின்றியும் பணிகள் மேற்கொள்ள உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யூ சங்கத்தின் நகரச் செயலாளர் அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் விபத்து குறித்து நினைவு கூறினார்கள். இதில், பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், இப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் அனைவரும் அந்தந்த ஆலைகளின் வளாகத்தில் விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பாக பணிகள் மேற்கொள்வது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

பிடிவாதம் தளர வேண்டும்!

எஸ்யூவி வாகனம் மோதி டாக்ஸி ஓட்டுநா் படுகாயம்! மேற்கு தில்லியில் சம்பவம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

