மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

டாஸ்மாக் கடையில் ரூ. 8.75 லட்சம் பணம் கையாடல்: 4 பேர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் டேனீஸ்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனைக் கணக்கில் இருந்து ரூ. 8.75 லட்சம் பணம் குறைந்தது அண்மையில் கண்டறியப்பட்டது. டாஸ்மாக் துறை அதிகாரிகள் நடத்திய

Updated On :7 செப்டம்பர் 2013, 12:40 pm

சேலம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 8.75 லட்சம் பணம் கையாடல் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 4 பேர் மீது இன்று வழக்குப் பதிவு செய்தனர்.

சேலம் மாவட்டம் டேனீஸ்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனைக் கணக்கில் இருந்து ரூ. 8.75 லட்சம் பணம் குறைந்தது அண்மையில் கண்டறியப்பட்டது. டாஸ்மாக் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடை ஊழியர்கள் அப்பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.இது குறித்து சேலம் மண்டல டாஸ்மாக் நிர்வாக மேலாளர் சிலம்பரசன், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், கடையின் மேற்பார்வையாளர் ஆர்.சி.செட்டிபட்டியைச் சேர்ந்த பிரகாசம், விற்பனையாளர் சண்முகசுந்தரம், பார் உதவியாளர்கள் முனுசாமி, முத்துசாமி ஆகிய 4 பேர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் குற்றப்பிரிவு போலீஸார், 4 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.