தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தரங்கம்பாடி அருகே தந்தையை கொன்றதாக மகன் கைது

தரங்கம்பாடி அருகே உள்ள குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் குஞ்சான்(65).இவருக்கு வெள்ளரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.இந்நிலையில் இவர் தனது வீட்டில்

Updated On :7 செப்டம்பர் 2013, 3:22 am

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

தரங்கம்பாடி அருகே உள்ள குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் குஞ்சான்(65).இவருக்கு வெள்ளரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.இந்நிலையில் இவர் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை மதியம் மர்மமான முறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.முன் விரோதம் காரணமாக குஞ்சான் மகன் சேகர்(40) என்பவர்தான் அடித்துக் கொன்றதாக அப்பகுதியில் தகவல் பரவியுள்ளது.இது குறித்து வெள்ளரியம்மாள் கொடுத்த புகாரின் பொறையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை இரவு சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குஞ்சான் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.