எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஒலிகளை பற்கள் மூலம் கேட்கலாம் என நிருபித்துள்ள சிதம்பரம் இளம் விஞ்ஞானிக்கு எம்எல்ஏ பாராட்டு

கடலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற இளம் விஞ்ஞானி போட்டியில் ஒலிகளை பற்கள் மூலம் கேட்கலாம் என நிருபித்து வெற்றி பெற்ற இளம் அறிவியல் விஞ்ஞானி விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம்

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 1:35 pm

G.Sundararaj

கடலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற இளம் விஞ்ஞானி போட்டியில் ஒலிகளை பற்கள் மூலம் கேட்கலாம் என நிருபித்து வெற்றி பெற்ற இளம் அறிவியல் விஞ்ஞானி விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம் மாணவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தார்

சிதம்பரம் சி.கொத்தங்குடித்தோப்பைச் சேர்ந்த ரவி, கற்பகம் தம்பதியரின் மகன் திவ்ய கமலேஷ்(13). இவர் சிதம்பரம் காமராஜ் சிறப்பு மெட்ரிக்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இம்மாணவர் கடந்த செப்.7 ந்தேதி கடலூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற இளம் அறிவியல் விஞ்ஞானி போட்டியில் பங்கேற்று ஒலிகளை காதுகளால் மட்டும் கேட்காமல், பற்கள் மூலம் கேட்க முடியம் என்பதை நிருபித்துள்ளார். இந்த அறிவியல் கண்டுபிடிப்பிற்காக மாவட்டத்தின் முதல் விருதான மண்டல பாலஸ்ரீ விருதை அம்மாணவர் பெற்றுள்ளார். மேலும் இம்மாணவர் புதுதில்லியில் நடைபெறவுள்ள அகில இந்திய இளம் அறிவியல் விஞ்ஞானி போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாணவர் திவ்ய கமலேஷ் வீட்டிற்கு இன்று சென்று சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார். எம்எல்ஏவுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்க கூட்டு நடவடிக்கை குழு இனைச்செயலாளர் சி.மதியழகன், ஊழியர் சங்க நிர்வாகிகள் கபில்தேவ், அசோகன், விஜயராணி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் அண்ணாமலைநகர் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.