எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ரேஷன் கடைகளில் உருளைக்கிழங்கு விற்பனை: கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் தகவல்

ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் உருளைக்கிழங்கு, வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 12:44 pm

G.Sundararaj

ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் உருளைக்கிழங்கு, வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பா.மில்லர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சந்தையில் விலை உயர்ந்து காணப்படும் பொருள்களை இனம் கண்டு அதன் தாக்கம் பொதுமக்களை சென்று சேராமல் இருக்கும் பொருட்டு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் படி வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை குறைந்த விலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. நமேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறைந்த விலையில் ரவா, மைதா, போன்ற பொருள்கள் வியாழக்கிழமை (செப்.12) முதல் சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடைகள் மூலமாக சிதம்பரம் நகரில் விற்பனை செய்யப்படுகிறது. சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள 425 நியாயவிலைக் கடைகளில் படிப்படியாக தேவைப் பட்டியல் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளது என பா.மில்லர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.