வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த அபிஷேகம் (57), ஜெபஸ்டின் (45), சின்னப்பன் (65), ஜெனிவாமேரி (40), கரோலின்மேரி (25), தீபா (27), தனலட்சுமி (40, முத்தரசன் (9), மரியபிரான்சிஸ் சேவியர் (28) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவையல்லாமல் சேத்தியாத்தோப்பு, கடலூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிலர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சுகாதாரமற்ற குடிநீரால் வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.