எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சிதம்பரம் அருகே வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு கிராமமக்கள் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கடந்த இருநாட்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக

News image
Updated On :14 செப்டம்பர் 2013, 1:17 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே வலக்காடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கடந்த இருநாட்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த அபிஷேகம் (57), ஜெபஸ்டின் (45), சின்னப்பன் (65), ஜெனிவாமேரி (40), கரோலின்மேரி (25), தீபா (27), தனலட்சுமி (40, முத்தரசன் (9), மரியபிரான்சிஸ் சேவியர் (28) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவையல்லாமல் சேத்தியாத்தோப்பு, கடலூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிலர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சுகாதாரமற்ற குடிநீரால் வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.