பிள்ளையார் கரைக்க சென்ற பல்கலை. மாணவர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சாவு
ஆந்திர மாநிலம் அதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ்குமார் (21). இவர் சிதம்பரம் அண்ணாமலைநகரில் சக மாணவர்களுடன் வீடு வாடகை எடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்


சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் இன்று சக மாணவர்களுடன் பிள்ளையார் கரைக்கச் சென்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் நீரில் மூழ்கி இறந்தார். அவரது உடல் தீயணைப்பு மீட்புத்துறையினரால் மீட்கப்பட்டு பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் அதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ்குமார் (21). இவர் சிதம்பரம் அண்ணாமலைநகரில் சக மாணவர்களுடன் வீடு வாடகை எடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் நண்பர்களுடன் சேர்ந்து தான் தங்யிருக்கும் வீட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர்சிலை வைத்து படைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று ராகேஷ்குமார் சக மாணவர்கள் 10 பேருடன் பிள்ளையாரை சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கரைக்கச் சென்றுள்ளார். அப்போது ஆற்றில் பிள்ளையாரை ஆற்றில் கரைத்துவிட்டு குளித்துக் கொண்டிருந்த போது ராகேஷ்குமார் நீரில் மூழ்கி அடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சக மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சென்று கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மாணவர் ராகேஷ்குமார் சடலத்தை மீட்டனர். பின்னர் அவரது உடல் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரதே பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...