எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தமிழில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா

கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார்விழா அறக்கட்டளை சார்பில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா

News image
Updated On :15 செப்டம்பர் 2013, 12:32 pm

G.Sundararaj

கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார்விழா அறக்கட்டளை சார்பில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சிதம்பரம் ஞானப்பிரகாசர்தெரு சேக்கிழார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சேக்கிழார் அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் க.சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிறுவனரின் புதல்விகள் சென்னை சுந்தரகுமாரி ராதாகிருஷ்ணன், யுஎஸ்ஏ டாக்டர் கிருஷ்ணகாந்தி, புதல்வர் வி.எஸ்.மணி ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர். பரிசு பெற்ற மாணவர்கள்: எஸ்.சண்முகப்பிரியா (ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி), கே.ஹாலிக்ரகுமான் (ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி), என்.நிவேதா (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி), என்.சாகித்தியா (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி).

விழாவில் டாக்டர் பழநிசுவாமிநாதன், ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி அறங்காவலர் டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன், தலைமை ஆசிரியர் வி.சுப்பிரமணியன், தமிழாசிரியர்கள் மு.கல்யாணராமன், பி.தமிழ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.