எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கார், வேன் மோதல்: டிரைவர் சாவு, மூவர் படுகாயம்

சிதம்பரம் புறவழிச்சாலையில் இன்று மாலை கார், வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கார் டிரைவர் இறந்தார். காரில் பயணம் செய்த மூவர் படுகாயம் அடைந்து சிதம்பரம் மருத்துவக்கல்லூரி

News image
Updated On :16 செப்டம்பர் 2013, 2:03 pm

G.Sundararaj

சிதம்பரம் புறவழிச்சாலையில் இன்று மாலை கார், வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கார் டிரைவர் இறந்தார். காரில் பயணம் செய்த மூவர் படுகாயம் அடைந்து சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்யாறு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் (45). இவர் தனது மனைவி ராஜேஸ்வரி (41), மகள் ஸ்ரீலேகா (16) ஆகியோர் காரில் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு திங்கள்கிழமை காலை சென்றுவிட்டு மாலை ஊர் திரும்பியுள்ளனர். அப்போது சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் சி.முட்லூர் எனுமிடத்தில் எதிரே கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இவ்விபத்தில் செய்யாறைச் சேர்ந்த கார் டிரைவர் விநாயகம் (45) விபத்தில் காரில் சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று காரின் கதவை உடைத்து டிரைவர் விநாயகம் மற்றும் படுகாயமுற்ற ரங்கநாதன், ராஜேஸ்வரி, ஸ்ரீலேகா ஆகியோரை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார் டிரைவர் விநாயகம் இறந்தார். மற்ற மூவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.