திருமணமான 5 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி கலியம்மாள் தம்பதியின் ஒரே மகள் சகுந்தலா (27). இவருக்கும் இதே மாவட்டத்தைச் வாரணவாசி பகுதியைச் சேர்ந்த


திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் அருகே திருமணமான 5 மாதத்தில் பெண் மர்மமான முறையில் திங்கள்கிழமை இரவு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி கலியம்மாள் தம்பதியின் ஒரே மகள் சகுந்தலா (27). இவருக்கும் இதே மாவட்டத்தைச் வாரணவாசி பகுதியைச் சேர்ந்த மாருதி மகன் செந்தில்குமார் (30) ஆகியோருக்கும் திருச்சி திருவாணைக்காவலில் உள்ள திருமண மண்டபத்தில் வெகுவிமர்சையாக கடந்த 15.4.2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் சமயபுரம் நெ.1 டோல்கேட் அருகேயுள்ள குறிஞ்சி நகரில் செந்தில்குமார் சகுந்தலா மற்றும் செந்தில்குமார் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சகுந்தலா மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற நெ.1 டோல்கேட் போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 5 மாதத்தில் பெண் இறந்ததால் வரதட்சனை தொடர்பாக இறந்தாரா என்பது குறித்து லால்குடி தனி ஆட்சியர் ஜெயேந்திரபானுரெட்டி விசாரணை நடத்தி வருகிறார்.பெண் தூக்கிட்டு இறந்தது தொடர்பாக சகுந்தலாவின் கணவர் செந்தில்குமார், செந்தில்குமார் தாய் விஜயராணி, தந்தை மாருதி ஆகியோரை நெ.1 டோல்கேட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...