கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு
தூத்துக்குடி தட்டார்தெருவை சேர்ந்தவர் அன்டோ (53). மீனவரான இவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் காவலாளியாகவும் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், மீன்பிடி துறைமுகத்தில்


தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் தூங்கிக் கொண்டிருந்த மீனவர் சனிக்கிழமை இரவு கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.
தூத்துக்குடி தட்டார்தெருவை சேர்ந்தவர் அன்டோ (53). மீனவரான இவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் காவலாளியாகவும் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அன்டோ சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாரம்.அப்போது, எதிர்பாராதவிதமாக கடலுக்குள் தவறி விழுந்த அன்டோ ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மிதந்துள்ளார். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற தாளமுத்துநகர் கடலோர காவல் பிரிவு போலீஸார் அன்டோவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...