புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லையில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :25 செப்டம்பர் 2013, 5:04 am

முருகன்

பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழிப்பறி வழக்கில் கைதாகி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு பரிசோதனைக்காக வந்த கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையைச் சேர்ந்த பென்சாம் (43) பயிற்சி மருத்துவர்களை தாக்கியதால் மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பணிகளை புறக்கணித்து மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.