புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருநெல்வேலியில் பார்வையற்றோர் சாலை மறியல் போராட்டம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வண்ணாரப்பேட்டை சாலையில் பார்வையற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :27 செப்டம்பர் 2013, 5:13 am

முருகன்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வண்ணாரப்பேட்டை சாலையில் பார்வையற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பார்வையற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 30க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் வெள்ளிக் கிழமை காலை திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து போராட்டத்தைக் கைவிட்டுச் செல்லும்படி கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.