மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

கரம் கோர்த்தனர் கல்லூரி மாணவர்கள்: சுத்தமானது கடலூர் வெள்ளிக் கடற்கரை

பெரியார் கல்லூரி மாணவர்கள் கடலூர் வெள்ளிக் கடற்கரையை இன்று வெள்ளிக்கிழமை சுத்தம் செய்தனர்.

Updated On :27 செப்டம்பர் 2013, 11:11 am

பெரியார் கல்லூரி மாணவர்கள் கடலூர் வெள்ளிக் கடற்கரையை இன்று வெள்ளிக்கிழமை சுத்தம் செய்தனர்.

சுற்றுலாத்துறை, பெரியார் கலைக் கல்லூரி சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வாக கடலூர் வெள்ளிக் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தொடங்கிவைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் கடற்கரை சுற்றுப்பகுதி முழுவதிலும் குப்பைகளை சேகரித்தனர். கல்லூரி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன், சுற்றுலா அலுவலர் தமிழ்செல்வி, கல்லூரி முதல்வர் என்.விஸ்வநாதன் மற்றும் 500 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதுபோல் சிதம்பரம் நடராஜர் திருக்கோயில், சுற்றுலா அலுவலகம் மற்றும் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்த அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.