ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் பொறியல் கல்லூரி மாணவர் சாவு

சிதம்பரம் அருகே சனிக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது மினிடோர் லாரி மோதி விபத்தில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News image
Updated On :28 செப்டம்பர் 2013, 12:09 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே சனிக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது மினிடோர் லாரி மோதி விபத்தில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

புவனகிரி அருகே உள்ள வாண்டையார்குப்பத்தைச் சேர்ந்த டி.ராஜூ (23). இவர் காட்டுமன்னார்கோயிலில் தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை தனது நண்பர் மணிகண்டனுடன் மோட்டார் சைக்கிளில் சேத்தியாதோப்பு சென்றார். அப்போது சியாப்பாடி எனுமிடத்தில் எதிரே மீன்ஏற்றி வந்த மினிடோர் லாரி மோதியது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவர் டி.ராஜூ உயிரிழந்தார். மற்றொருவரான மணிகண்டன் படுகாயம் அடைந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.