ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் அருகாமையில் உள்ள இரு தெருக்களில் இரு வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு 35 சவரன் தங்க நகை வெள்ளிக்கிழமை இரவு திருடப்பட்டுள்ளது.
ஆம்பூர் பசவேஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (36). இவருடைய தாய் ராஜேஸ்வரி (62). இவர்கள் இருவர் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் உள்ள தன்னுடைய மற்றொரு மகன் வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றுவிட்டார். ரஜினிகாந்த் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். இவரும் தன்னுடைய பணி காரணமாக வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வரவில்லை. வீடு வெளியில் பூட்டப்பட்டிருந்தது.காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறந்திருந்துள்ளது. உள்ள சென்றுபார்த்த போது அனைத்து அறைகளின் கதவுகளின் பூட்டு உடைத்து திறக்கப்பட்டு அறைக்குள் வைக்கப்பட்டிருந்த 5 பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பீரோவுக்குள் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது.
மற்றொரு வீட்டிலிரும் திருட்டு :
35 சவரன் நகை திருட்டு போன தெருவிற்கு பக்கத்தில் உள்ள கவரை தெருவில் வசிப்பவர் பார்வதியம்மாள் (60). இவர் குடியாத்தத்தில் உள்ள தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு சனிக்கிழமை காலை வந்துள்ளார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்தே இருந்துள்ளது. உள்ளேயிருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 30 கிராம் வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.5 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவை திருடுபோயிருந்தது.
தகவலின் பேரில் ஆம்பூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

