36 லட்சம் மதிப்பிலான 12 டன் செம்மர கட்டைகள் பறிமுதல்: இருவர் கைது
தமிழக எல்லையில் உள்ள கும்மிடிப்பூண்டியில் எல்லைப்பகுதியான ஆரம்பாக்கம், மாதர்பாக்கம்-சத்தியவேடு சாலை மார்க்கமாக செம்மரங்கள் கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. ஆந்திரா மாநிலம் தெலுங்கான


கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ராமசந்திராபுரம் பகுதியில் குடிசை வீட்டில் பதுக்கியிருந்த 12 டன் செம்மரங்கள் தனிப்பிரிவு போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தமிழக எல்லையில் உள்ள கும்மிடிப்பூண்டியில் எல்லைப்பகுதியான ஆரம்பாக்கம், மாதர்பாக்கம்-சத்தியவேடு சாலை மார்க்கமாக செம்மரங்கள் கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. ஆந்திரா மாநிலம் தெலுங்கான பிரிவு பிரச்சனைக்கு பிறகு ஆந்திர போலீஸார் செம்மரங்கள் கடத்துவதை தடுப்பதில் கவனம் செலுத்தவில்லை.இந்த சூழலை பயன்படுத்தி ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு செம்மரங்கள் கடத்தப்படுவதது கடந்த 2 மாத காலமாக அதிகரித்து வந்த நிலையில் கடந்த 1 மாதத்தில் கும்மிடிப்பூண்டி சரகத்தில் 4 முறை செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ராமசந்திராபுரத்தில் ஒரு குடிசை வீட்டில் செம்மரங்கள் பதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரூபேஷ் குமார் மீனா அவர்களுக்கு தகவல் சென்றது.இந்த தகவலை தொடர்ந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரூபேஷ்குமார் மீனாவின் தனிப்பிரிவு போலீஸôர் ராமச்சந்திராபுரம் பகுதிக்கு விரைந்து அங்கு தனியார் தொழிற்தசாலை அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த குடிசைக்குள் விலையுயர்ந்த செம்மரத்துண்டுகள் பதுக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர்.
தொடர்ந்து போலீஸார் அந்த குடிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் எடையுள்ள செம்மரத்துண்டுகளையும் செம்மரத்துண்டுகளை ஏற்றுவதற்காக நின்றிருந்த 5 லோடு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களின் மதிப்பு சுமார் 36 லட்சம் ஆகும்.தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரத்துண்டுகளை பாதிரிவேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் இது தொடர்பாக மனோ(42), அன்பு ரமேஷ்(28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...