ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரம் மதுபானக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை!

சிதம்பரம் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் காலவதியான மதுப்பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும், மதுஅருந்து இடத்தில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு

News image
Updated On :30 செப்டம்பர் 2013, 1:13 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் டாஸ்மாக் மதுபானக்கடை மற்றும் பார்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டார்.

சிதம்பரம் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் காலவதியான மதுப்பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும், மதுஅருந்து இடத்தில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புதுறையினருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஹெச்.பி.ராஜா, கீரப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி அருண்மொழி ஆகியோர் சிதம்பரம் பஸ்நிலையம், எஸ்.பி.கோயில்தெரு, மாலைக்கட்டித்தெரு, லால்கான்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது போலியான மதுபாட்டில்கள், காலாவதியான மதுப்பாட்டில்கள் உள்ளதா என சோதனையிட்டனர். மேலும் பாட்டில்களை கூடுதல் விற்பனை செய்யக்கூடாது விற்பனையாளருக்கு அறிவுறுத்தினர். பின்னர் மதுஅருந்தும் கூடத்தில் இருந்த காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள், தரமாற்ற எண்ணைய், மற்றும் வீணாகிய முட்டைகள் ஆகியவற்றை கைப்பற்றி அழித்து, இதுபோன்ற சுகாதாரமற்ற உணவு பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்திவிட்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.