சிதம்பரத்தில் ரயில்தினம் கொண்டாடிய அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள்!
விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே அகல ரயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர், பல்கலைக்கழகம் தொடங்கும் நேரத்திலும், முடியும் நேரத்திலும் மாணவர்களுக்கு வசதியாக பாசஞ்சர் ரயில்களை


சிதம்பரம் ரயில் நிலையத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் ரயில்தினத்தை செவ்வாய்க்கிழமை விமரிசியாக கொண்டாடினர்.
விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே அகல ரயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர், பல்கலைக்கழகம் தொடங்கும் நேரத்திலும், முடியும் நேரத்திலும் மாணவர்களுக்கு வசதியாக பாசஞ்சர் ரயில்களை இயக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து கடந்த ஆண்டு விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே எண்:56876 பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது.
இந்த பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அன்று ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ரயில்தினமாக கொண்டாடினர். இதனை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு வந்த மயிலாடுதுறை-விழுப்புரம் பாசஞ்சர் ரயிலுக்கு வாழைமரம், தோரணம் கட்டினர். ரயில் என்ஜின் முன்பு கேக் வெட்டியும், டிரைவர் வெங்கடாஜலத்திற்கு சால்வை அணிவித்தும், பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் விமரிசியாக ரயில்தினத்தை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ரயில்வே நிலைய மேலாளர் வரதராஜன், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...