எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மனைவியை தீவைத்துக் கொளுத்திய கணவர் கைது

வந்தவாசியை அடுத்த ஆளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(30). இவரது மனைவி அனிதா(28). இவர்களுக்கு கவின்(5), தமிழ்க்குமரன்(4) என்ற குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கும், அனிதாவுக்கும்

News image
Updated On :1 ஏப்ரல் 2014, 10:13 am

கணேஷ்கிரி

வந்தவாசி அருகே மனைவியை தீவைத்துக் கொளுத்தியதாக கணவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

வந்தவாசியை அடுத்த ஆளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(30). இவரது மனைவி அனிதா(28). இவர்களுக்கு கவின்(5), தமிழ்க்குமரன்(4) என்ற குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கும், அனிதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அனிதாவை முருகன் தாக்கினாராம்.

இதில் வேதனை அடைந்த அனிதா தான் சாகப்போகிறேன் என்று கூறி வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன்மீது ஊற்றினாராம். இதைக் கண்ட முருகன், மண்ணெண்ணை கேனில் மீதமிருந்த மண்ணெண்ணையையும் அனிதா மீது ஊற்றி தீவைத்தாராம். இதில் பலத்த தீக்காயமடைந்த அனிதா வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அனிதா அளித்த புகாரின்பேரில் முருகன் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்த வடவணக்கம்பாடி போலீஸார் அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.