நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் அருகே சாயத் தொழிற்சாலையை கண்டித்து 20 கிராம மக்கள் உண்ணாவிரதம்

சிதம்பரம் வட்டம் பெரியபட்டு அருகே சைமா என்ற தனியாருக்கு சொந்தமான சாயத் தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் சாயத்தொழிற்சாலை அமைந்தால் அப்பகுதி

News image
Updated On :2 ஏப்ரல் 2014, 12:53 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே சாயத்தொழிற்சாலையை கண்டித்து 20 கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் வட்டம் பெரியபட்டு அருகே சைமா என்ற தனியாருக்கு சொந்தமான சாயத் தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் சாயத்தொழிற்சாலை அமைந்தால் அப்பகுதி மக்களின் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் தொழிற்சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், தொழிற்சாலையை இப்பகுதியில் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி பெரியப்பட்டு அருகில் உள்ள பெரியாண்டிகுழி, சாமியார்பேட்டை, வாண்டையாம்பள்ளம், குமாரப்பேட்டை, அன்னப்பன்பேட்டை, ரெட்டியார்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் தமிழநாடு விவசாயிகள் சங்கம், கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்டோர்  பெரியப்பட்டு கடைவீதியில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாமியார்பேட்டை கிராமத் தலைவர் முருகன், வாண்டையாம்பள்ளம் கிராமத்  தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், பரங்கிப்பேட்டை ஒன்றிய தமிழநாடு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கருனைச்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

போராட்டக் குழுவைச் சேர்ந்த கதிர்வேல், பரணி, பெரியாண்டிகுழி கிராமத் தலைவர் கலியபெருமாள், பெரியபட்டு கிராமத் தலைவர் கலியமூர்த்தி, சிலம்பிமங்கலம் கிராமத் தலைவர் எத்திராஜ், ஆண்டார்முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்குட்டுவன், காயல்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடாது, சாயக் கழிவுகளை கடலில் விடுவதால் மீனவர்களின் வாழ்வாதாராம் பாதிப்படையும், தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அழிக்கக்கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.