நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

முதன்முதலில் சிதம்பரத்தில் தேர்தல் பிரசார மேடை ஏறிய ஜெ.குரு எம்எல்ஏ!

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்த பிறகு வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ, சிதம்பரத்தில் முதன்முதலாக புதன்கிழமை பாமக வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினத்தை அறிமுகப்படுத்தி

News image
Updated On :2 ஏப்ரல் 2014, 2:20 pm

ஜி.சுந்தரராஜன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்த பிறகு வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ, சிதம்பரத்தில் முதன்முதலாக புதன்கிழமை பாமக வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினத்தை அறிமுகப்படுத்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியதால் கட்சி நிர்வாகிகள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் பாமக, தேமுதிக, மதிமுக, புதிய நீதிகட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி உருவானது. பின்னர் தொகுதி பங்கீடு முடிவுற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிரசார மேடை ஏறாமல் இருந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ சிதம்பரத்தில் பாமக வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம் அறிமுகப்படுத்தி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று புதன்கிழமை பேசினார். இதனால் தேமுதிக, பாஜக, மதிமுக, புதிய நீதிகட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். குறிப்பாக மேடையில் பேசிய ஜெ.குரு எம்எல்ஏ, குஜராத்தில் சிறப்பாக ஆட்சி புரியும் நரேந்திரமோடிதான் பிரதமருக்கு தகுதியானவர் எனக்குறிப்பிட்டு பேசினார். இதனால் பாரதியஜனதா கட்சியினர் மிகவும் உற்சாகமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.