நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மக்களை கை தூக்கிவிட வந்த எனக்கு பாமக கரங்கள் கொடுத்துள்ளது: கே.ஐ.மணிரத்தினம்

நான் சாதாரண மக்களை கை தூக்கிவிட அரசியலுக்கு வந்தேன். எனக்கு எந்த கையும் உதவவில்லை. இந்தை கையை, தூக்குவதற்கு பாமக கரங்கள்  வந்துள்ளது என சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மாறி,

News image
Updated On :2 ஏப்ரல் 2014, 2:17 pm

ஜி.சுந்தரராஜன்

நான் சாதாரண மக்களை கை தூக்கிவிட அரசியலுக்கு வந்தேன். எனக்கு எந்த கையும் உதவவில்லை. இந்த கையை, தூக்குவதற்கு பாமக கரங்கள் வந்துள்ளது என சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மாறி, பாமகவில் இணைந்து சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளரான கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த 25 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, ஓடுக்கப்பட்ட சமுதாயத்தை ஏமாற்றி வரும் ஒருவரை சமூகத்தை விட்டு அகற்றுவது என உறுதிபூண்டு களப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். அதற்கு சரியான தளம் அமையாமல் இருந்தது. தற்போது அந்த தளத்தை பாமக மூலம் எனக்கு நடராஜப் பெருமான் அமைத்துக் கொடுத்துள்ளார். சமுதாயத்தின் பெயரைச் சொல்லி ஒருவர் அச்சமுதாய மக்களை ஏமாற்றி வருகிறார். ஆனால் மக்களுக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை.

நான் கடந்த 3 ஆண்டுகளாக கிராமப்புறங்களுக்கு சென்று சாதி, மத வேறுபாடின்றி, ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். ஒரு சிலர் நான் பாமகவில் சேர்ந்ததை தவறாக பேசுகின்றனர். இந்த இரு சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாஸின் கொள்கையோடு சேர்ந்துள்ளேன். நான் கட்சி மாறவில்லை. ஒரு சகோதரர் கூட கைகோர்த்து உள்ளேன். ஏமாற்றுகின்ற அரசியல் தலைமையை எதிர்த்து போராட அரசியலில் ஈடுபட முடிவு எடுத்து தேர்தல் களத்தில் நிற்கிறேன். சமூக துரோகிகள் மீண்டும் இந்த தொகுதியை கையில் எடுத்துவிடக்கூடாது. சமூக துரோகிகளை சமுதாயத்திலிருந்து வெளியேற்ற வேண்டிய நேரம் இது. எனவே தீமையை அடையாளம் கண்டு, மக்கள் அமைதியாக இருந்து என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.