நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்தண்டனை: சிதம்பரம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

கொலை வழக்கு ஒன்றில் இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிதம்பரம் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

News image
Updated On :4 ஏப்ரல் 2014, 12:54 pm

ஜி.சுந்தரராஜன்

கொலை வழக்கு ஒன்றில் இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிதம்பரம் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் காயல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.பிரபு (36). இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த பி.மணிகண்டன் (27), கே.சஞ்சய்காந்தி (32) ஆகியோருக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மீன் குட்டை வைத்துள்ள பிரபு மீன்களை ஏலம் விட்டு பணம் தருவதாக இருவரிடம் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12-3-2010 அன்று மீன்குட்டையில் பிரபு இருந்த போது, மணிகண்டன், சஞ்சய்காந்தி ஆகிய இருவரும் சென்று பணம் கேட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு பிரபுவை தாக்கி மீன்குட்டையில் உள்ள நீரில் கழுத்தை பிடித்து அழுத்தியுள்ளனர். அப்போது அங்கு  பிரபுவின் அண்ணன் மகன் ரியாஸ் வருவதை கண்டு இருவரும் பிரபுவை கழுத்து நெறித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸார், மேற்கண்ட இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, சிதம்பரம் விரைவு நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தனர். அரசு தரப்பில் வழக்குரைஞர் தேவராஜன் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிவுற்று விரைவு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சுபாதேவி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். குற்றம் நிருபிக்கப்பட்டதால், மணிகண்டன், சஞ்சய்காந்தி ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனையும், அபராதம் தலா ரூ.ஆயிரம் விதித்து நீதிபதி சுபாதேவி தீர்ப்பு வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.