நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கோ.நந்தகோபாலகிருஷ்ணன், சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாங்கள் அணி பலத்தை நம்பி நிற்கிறோம், எதிரணியினர் பண பலத்தை நம்பி நிற்கின்றனர். தற்போது தமிழகத்தில் 5 முனை போட்டி இருந்தாலும், உண்மையான போட்டி திமுக கூட்டணிக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் உள்ளது. வாக்குகளை விலைக்கு வாங்க சிலர் முயற்சி மேற்கொள்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தடுக்க கிராமப்புறங்களை 24 மணி நேரமும் வீடியோ ஒளிப்பதிவாளர்களை கொண்டு தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். மேலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தொண்டர்கள் மூலம் கிராமங்களில் கண்காணிப்பு குழு அமைக்கப்படும். தேர்தல் செலவுகள் தான் ஊழலுக்கு வழிவகுக்கிறது. இதனால் பிரசார நேரம், செலவு ஆகியவற்றை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்றார்.
முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், கடலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச்செயலர் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவுக்கு 5-ஆவது தோல்வி!

வால்பாறை: கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரளப் பயணிகள்!
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

