நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இந்தியாவை காங்கிரசால் மட்டுமே காப்பாற்ற முடியும்: கே.வி.தங்கபாலு

இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அது காங்கிரஸ் கட்சியால் மட்டுமேதான் முடியும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான கே.வி.தங்கபாலு தெரிவித்தார்.

News image
Updated On :6 ஏப்ரல் 2014, 8:07 am

ஜி.சுந்தரராஜன்

இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அது காங்கிரஸ் கட்சியால் மட்டுமேதான் முடியும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான கே.வி.தங்கபாலு தெரிவித்தார்.

சிதம்பரம் காந்திசிலை அருகே சனிக்கிழமை சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமானை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு பேசியது: இந்தியாவில் ஜனநாயகம் தழைத்திடவும், மதச்சார்பற்ற கொள்கை நிலைத்திடவும், நாட்டு மக்களின் சுதந்திரம் நிலைத்திடவும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். தகவல் உரிமை சட்டத்தை நிறைவேற்றி, அதன் மூலம் இரண்டாவது சுதந்திரத்தை பெற்று தந்தோம். ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.19 ஆயிரம் கோடி கல்விக்கடன் வழங்கியுள்ளோம். 21 ஆயிரம் கோடி விவசாய கடன் நிவாரணம் வழங்கியுள்ளோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 120 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்காக பணியாற்றி வரும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, சிறுபான்மையின மக்களுக்கு முன்னுரிமை அளித்து வரும் கட்சி, காங்கிரஸ் கட்சிதான். சாதி, மதம் கடந்த அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைக்கும் கட்சிதான் காங்கிரஸ் கட்சி. திமுக, அதிமுக, பாஜகவிற்கு வாக்களிக்க என்னுபவர்கள், சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி, காங்கிரஸ் கட்சி என்பதை மறந்துவிடாதீர்கள். உலகத்திலேயே 70 கோடி மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, சட்டமாக நிறைவேற்றி தந்தவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரதமர் மன்மோகள்சிங் ஆகியோர்தான். மதச்சார்பற்ற அரசுக்கு காங்கிரஸ் கட்சி மட்டும்தான் தலைமை ஏற்க முடியும் என கே.வி.தங்கபாலு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.