கணினி முறையில் நூல் வழங்கும் முறை: பல்கலை. நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தொடங்கி வைத்தார்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொதுநூலகத்தில் கணினி மூலம் மாணவர்களுக்கு நூலை வழங்குதல் மற்றும் பெறுதல் குறித்த முறையினை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொதுநூலகத்தில் கணினி மூலம் மாணவர்களுக்கு நூலை வழங்குதல் மற்றும் பெறுதல் குறித்த முறையினை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
கணினி முறையில் நூல்களை பெறும் புதிய முறையினை பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஷிவ்தாஸ்மீனா வலியுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அதிதாரி தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், கலைப்புல முதல்வர் ராஜேந்திரன், நூலகத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நூலகத்துறை தலைவர் நாகராஜன், உதவி நூலகர்கள் பானுமதி, ராஜேஸ்வரி, மீனாட்சி, நடராஜன், சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...