எம்ஜிஆரை மறந்த ஜெயலலிதா இரட்டை இலையை மறப்பாரா? விஜயகாந்த் கேள்வி
திருவாரூரிலிருந்து நான் வருவேனா மாட்டேனா என்று நினைத்திருந்தீர்கள். சாலை சரியில்லை. ஜெயலலிதா இதுபோன்று சாலைவழியாக பயணம் செய்தால்தான் மக்களின் கஷ்டம் தெரியும். நான் இந்த


அதிமுக உருவாக்கிய எம்ஜிஆரை மறந்த, ஜெயலலிதா இரட்டை இலையை மறப்பாரா? என காட்டுமன்னார்கோயிலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி காட்டுமன்னார்கோயியில் வியாழக்கிழமை பாமக வேட்பாளர் சுதா மணிரத்தினத்தை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
திருவாரூரிலிருந்து நான் வருவேனா மாட்டேனா என்று நினைத்திருந்தீர்கள். சாலை சரியில்லை. ஜெயலலிதா இதுபோன்று சாலைவழியாக பயணம் செய்தால்தான் மக்களின் கஷ்டம் தெரியும். நான் இந்த மோசமான சாலையை பார்த்து கஷ்டப்பட்டேன். அம்மா குடிநீர் திட்டம், அம்மா உணவகம் என பெயரிடப்பட்டு, எம்ஜிஆர் பெயர் மறைக்கப்பட்டுள்ளது. நான் எது பேசினாலும் உடனே வழக்குப் பதிவு செய்து எனக்கு பிடிவாரண்டு போடுவார்கள், ஜெயலலிதா வருமானவரி வழக்கில் ஆஜராகவிட்டாலும் பிடிவாரண்டு போடுவதில்லை. சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம். ஏன அவருக்கு பிடிவாரண்டு அனுப்புவதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். சண்டை இல்லை.
வீராணம்ஏரி இங்கு உள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் வீராணம்ஏரி திட்டம், அறுவாமூக்கு திட்டம் ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளது. கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்படாததால், நீர் இல்லை. சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் இதயக்கனி என்ற படத்தில் எம்ஜிஆர் கிளைமாக்ஸில் சண்டை காட்சியில் நடித்தார். அந்த சுற்றுலா ஸ்தலம் மேம்படுத்தப்படவில்லை. ஜெயங்கொண்டம் மின்நிலையம் அமைக்கப்படவில்லை. கொண்டு வருவேன் என சொல்லிவிட்டு நிலத்தை கையகப்படுத்தி இதுவரை எதுவும் செய்யவில்லை. பெரம்பலூர்-குன்னம் இடையே மருத்துவக்கல்லூரி தொடங்கப்படவில்லை என விஜயகாந்த் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...