நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பண்ருட்டி தி.வேல்முருகன் மீது, பாமக தேர்தல் அலுவலரிடம் புகார்

பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் மீது சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உதவித்தேர்தல் அதிகாரியும்,

News image
Updated On :11 ஏப்ரல் 2014, 7:58 am

ஜி.சுந்தரராஜன்

பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் மீது சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உதவித்தேர்தல் அதிகாரியும், சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்திடம் பாமக நகரச் செயலாளர் முத்து.குமார்  வியாழக்கிழமை புகார் மனு அளித்துள்ளார்.

அம்மனுவில்: அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து கடந்த ஏப்.8-ம் தேதி சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரையும், அவர்களது குடும்பத்தினரையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும், அவமானப்படுத்தும் நோக்கில் அருவருப்பான வார்த்தைகளால் திட்டி உள்ளார். அவரது பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் முத்து.குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.