கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் கொலை: வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கனகம்பாக்கம்கொல்லூர் கிராமங்களுக்கிடையே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் ஏ.என்.குப்பத்தை சேர்ந்த கவிதா(30)என்ற பெண்


கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கனகம்பாக்கம்கொல்லூர் கிராமங்களுக்கிடையே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் ஏ.என்.குப்பத்தை சேர்ந்த கவிதா(30)என்ற பெண் கத்தியால் குத்தப்பட்டு பலியானார்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கனகம்பாக்கம்கொல்லூர் கிராமங்களுக்கிடையே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுடன் இருந்த நிலையயில் அக்கம் பக்கத்தார் இது குறித்து கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர். தொடர்ந்து போலீஸார் சம்பவ இடம் விரைந்து படுகாயத்துடன் இருந்த அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க கொண்டு செல்லும் போது வழியிலேயே அவர் பலியானார்.
இந்நிலையில் இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட பெண்மணி கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பத்தை சேர்ந்த பாபு என்பவரின் மனைவி கவிதா என்பது தெரியவந்தது. கவிதாவிற்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் மகளும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கவரப்பேட்டையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஏ.என்.குப்பத்தில் கவிதா கொலை செய்யப்பட்ட நிலையில் அவரை யாராவது இங்கு அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என்று கருதிய போலீஸôர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் ஏ.என்.குப்பம் பகுதியை சேர்ந்த முத்தையா(27) என்பவர் தான் கவிதாவை கவரப்பேட்டைக்கு அழைத்து சென்றார் என்ற தகவலின் பேரில் அவரிடம் விசாரித்த போது அவர் தனக்கும் கவிதாவிற்கும் தொடர்பு இருந்த நிலையில் தனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், இந்த திருமணத்திற்கு கவிதா இடையூறாக இருப்பார் என்று எண்ணி அவரை அழைத்து சென்று கொன்று விட்டதாக முத்தையா கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கவரப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...